ETV Bharat / state

செவிலியரின் பாதங்களில் மலர் தூவிய வழக்கறிஞர்!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமணையில் சிகிச்சையிலிருந்த வழக்கறிஞர், செவிலியரின் பாதங்களில் மலர் தூவி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lawyer -sprinkled Flower at the nurse's feet in pudukkottai

author img

By

Published : Jun 10, 2021, 10:31 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணிமாறன். கடந்த சில நாள்களாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

ஆரம்பக் கட்டத்தில் இருமலுடன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட இவர் தொடர் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்தார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது இவரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட செவிலியருக்கு நல்ல முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்த வழக்கறிஞர் மணிமாறன் செவிலியரை வெளியே வரச்சொல்லி இரண்டு செவிலியரின் பாதங்களிலும் மல்லிகைப் பூவை தூவி கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

மேலும் செவிலியரிடம், என்னை எந்த அளவிற்கு கவனித்துக் கொண்டீர்களோ அதுபோல இங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். வீட்டிற்குச் சென்ற பிறகு நல்ல உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று செவிலியர் மணிமாறனுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அருகில் பார்த்துக்கொண்டிருந்த நோயாளிகள் நெகிழ்ந்து போயினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.