ETV Bharat / state

"மருத்துவர்கள் யாருமே மகிழ்ச்சியுடன் இல்லை" - அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம்! - TN CM MK STALIN

மருத்துவர்கள் யாருமே மகிழ்ச்சியுடன் இல்லை. தாங்கள் அளித்த அரசாணைகள் உண்டாக்கிய சந்தோஷங்கள் மாறி தற்போது அரசு மருத்துவர்கள் விரக்தியில் பணி செய்து வருகின்றனர் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

tngda logo மற்றும் கடிதம்
tngda logo மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 7:16 PM IST

சென்னை : தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தாங்கள் பதவியேற்ற உடன் எங்களது வெகு நாளைய கோரிக்கைகளான சம்பளம் மற்றும் பதவி உயர்வை அரசாணை 293 மற்றும் 2 மூலம் நிறைவேற்றி தந்துள்ளீர். இதற்கு நன்றியுடன் மருத்துவர்கள் பணியிடங்களில் பற்றாக்குறை இருந்தும் அதை சாக்காகவோ, குறையாகவோ எவரிடமும் தெரிவிக்காமல் அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ பணியினை எந்தவொரு குறையில்லாமல் தங்களது நல்லாட்சியில் செய்து வந்தோம்.

இந்த நிலையில் எங்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காமல், காலியிடங்களை நிரப்பாமல் வேலைக்கேற்ற பணியிடங்களை உருவாக்காமல் Maternal Death Audit, Insurance Targets, Ranking என்று பல வகையில் மாநில உயர் அதிகாரிகளும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் எங்களை கடந்த ஒரு வருடமாக கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்ற வாரத்தில் சென்னையில் ஒரு மருத்துவர் கத்திக்குத்து காயத்துடன் உயிர் பிழைத்து வந்தும் கூட அரசு டாக்டர்களை வில்லன்கள் போல சமூக ஊடகங்களிலும் சித்தரித்திருந்தனர். இது எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாம் எங்கு தவறு செய்தோம் என்று நாங்கள் ஆராய்ந்து, கடைசியில் கனிவாகவும், விரிவாகவும் நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் பேசாததே காரணம் என்றும், நோயாளிகளிடம் குரலை உயர்த்தி பேசவோ, கடினமாக பேசவோ கூடாது என்பதே முக்கியம் என்பதை அறிந்தோம். லஞ்சம் வாங்காமல் இருப்பதோ, சிறந்த வகையில் மருத்துவ சேவை செய்வதோ பத்தாது என்றும் உணர்ந்து கொண்டோம்.

எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்து அரசு மருத்துவர்களிடையே இந்த எதார்த்த்தை பரப்பியும் வருகிறோம். குறிப்பாக 12 வயதுக்கு மேல் உள்ள எந்த நோயாளியையும், உறவினரையும் "நீ வா போ' என்று பேசாமல், வயது குறைவானவராக இருந்தாலும் நீங்கள் வாங்கள் என்றே பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.

அரசு மருத்துவர்கள் 99.9 சதவீதம் லஞ்சம் பெறுவதில்லை. இருக்கும் வசதிகளை கொண்டு பணிகளை செய்து வருகின்றனர். எப்போதும் அரசுடன் இணக்கமாகவே பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் உள்ள குறைகளை பொதுவெளிக்கு சொல்லாமல் பணி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி TNGDA போராட்டம் அறிவிப்பு!

ஆனால் யாருமே மகிழ்ச்சியுடன் தற்போது இல்லை. தாங்கள் அளித்த அரசாணைகள் உண்டாக்கிய சந்தோஷங்கள் மாறி தற்போது அரசு மருத்துவர்கள் விரக்தியில் பணி செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் மிகவும் கஷ்டப்பட்டு பிற மருத்துவர்களை விட இரண்டு மடங்கு வேலை செய்யும் மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவம் அல்லாத உயர் அதிகாரிகள் கொடுமை ஒருபுறம் இருக்க, DMS, DPH மற்றும் இணை இயக்குநர்களும் புரிந்தும் புரியாதது போல மகப்பேறு மருத்துவர்களை ஒவ்வொரு கர்ப்பிணி மரணத்திற்கும் கேள்வி கேட்டு குற்றவாளிகள் போல நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று உயர் அதிகாரிகள் அரசு மருத்துவர்களை குறை கூறினால் அது அரசு மருத்துவமனைகளை குறை கூறுவதாகவே ஆகும். தங்கள் மூன்றரை ஆண்டுகள் ஆட்சிக்கு பின்னர் இவ்வாறு கூறுவது பொதுமக்களிடையே தங்களது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கூறும் 'தமிழர்களின் அடிப்படை சுயமரியாதை' என்பதே ஆகும். தங்கள் ஆட்சியில் பணிபுரியும் நாங்கள் கேட்பதும் மருத்துவர்களின் சுயமரியாதை மற்றும் கௌரவம் என்பது மட்டுமே ஆகும்.

அரசின் உயர் அதிகாரிகளால் விட்டுக் கொடுக்கப்பட்டு மக்களிடையே மருத்துவர்களின் மரியாதை பாதிக்கப்படக்கூடாது. எங்களுக்கு மக்கள் உடல் நலத்தை நலமாக்க தெரியும். உயிரைக் காக்க தெரியும் ஆனால் இது போன்ற ஒரு மரியாதை குறைவை மக்கள் கொடுத்தாலோ, பழிவாங்கும் எண்ணத்தில் நடந்தாலோ அவற்றை எங்களுக்கு சந்திக்க தெரியாது" என கடிதத்தில் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.