ETV Bharat / state

கரோனா: நடமாடும் ஏடிஎம் வாகன சேவை தொடக்கம் - புதுக்கோட்டை நடமாடும் ஏ.டி.எம் வாகன சேவை

புதுக்கோட்டை: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடமாடும் ஏடிஎம் வாகன சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

நடமாடும் ஏ.டி.எம் வாகன சேவை தொடக்கம்
நடமாடும் ஏ.டி.எம் வாகன சேவை தொடக்கம்
author img

By

Published : Apr 10, 2020, 2:46 PM IST

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசுகையில், " தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கென பிரத்யேகமாக, பால், காய்கறி, மளிகை பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கிட வாகன வசதிகள் செய்யப்பட்டன. இதற்காக, மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுமக்கள் ஏடிஎம் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வெளியில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் ஏடிஎம் வாகனத்தை பார்வையிட்டோம். இதுவொரு பாதுகாப்பான நடவடிக்கை. குறிப்பாக, பணம் எடுக்க வரும் பொதுமக்களை கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து தூய்மையைப் பராமரிக்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் ஏ.டி.எம் வாகன சேவை தொடக்கம்

பொதுமக்கள் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில், சமூக இடைவெளியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:'கையில் ஒரு கடிதம்... ஸ்கூட்டரில் 1,400 கிமீ பயணம்' - ஊரடங்கில் சிக்கிய மகனை மீட்ட தாயின் அசாத்திய தைரியம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.