ETV Bharat / state

காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் - முத்துப்பேட்டை

காரைக்குடி - திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்
author img

By

Published : Aug 3, 2021, 7:44 AM IST

காரைக்குடி திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 4 முதல் மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வண்டி எண் 06197 திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 02.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06198 காரைக்குடி - திருவாரூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காரைக்குடியிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருவாரூர் சென்று சேரும். இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில் இருபுறமும் டீசல் என்ஜின் உள்ள "டெமு" வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயின்குடி, அறந்தாங்கி, வளர மாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாண்டியன் சிறப்பு ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.