ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பொங்கலை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Jallikattu was held near Ponnamaravathi in Pudukkottai
புதுக்கோட்டை அருகே சீறிபாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்
author img

By

Published : Jan 29, 2023, 8:28 PM IST

புதுக்கோட்டை அருகே வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் தைப் பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர், ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடக்கநிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 100 மாடுகளும் 50 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள், துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை மாடு பிடி வீரர்கள் மல்லுக்கட்டி பிடித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளைத் தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள்,ஃபேன், மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.

காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின்படி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதையும் படிங்க: புனித வனத்து அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு.. வீரர்கள் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.