புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வர்த்தபுரீஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் புதிய விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 630 காளைகள் பங்கேற்றன.
காளைகளை அடக்க 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து, வீரர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சிட்டாகப் பறந்து விளையாட்டு காட்டின.
சில காளைகளின் திமிலைப் பிடித்து தொங்கிய வீரர்களை ஒரு சுற்று சுற்றி பந்தாடின. காளைகளை அடக்கியவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: 37 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!