புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேவுள்ள க.புதுப்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை , ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 600 மாடுகள் கலந்துகொண்டன.
சீறிப்பாயும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள், களம் இறக்கபட்டனர். வீரர்கள் பிடியில் அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர்.
வீரர்கள் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகள், காளையை அடக்கும் வீரர்களுக்குத் தங்கக்காசு, வெள்ளிக்காசு, குக்கர், கட்டில், அண்டா உள்ளிட்ட பல பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை முதல் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீறிவரும் காளைகள்: செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி!