ETV Bharat / state

தேசிய கராத்தே போட்டியில் புதுக்கோட்டை சிறுவர்கள் 92 பதக்கங்கள் வென்று சாதனை! - 92 பதக்கங்கள் வென்று சாதனை

புதுக்கோட்டை: தேசிய அளவிளான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சிறுவர்கள், 22 தங்கப் பதக்கங்கள் உட்பட 92 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கராத்தே போட்டியில் புதுக்கோட்டை சிறுவர்கள் 92 பதக்கங்கள் வென்று சாதனை
author img

By

Published : May 1, 2019, 7:33 AM IST

Updated : May 1, 2019, 7:41 AM IST

கேரள மாநிலம் திருச்சூரில் 25ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டி வி.கே.என் மேனன் உள்ளரங்க ஆடுகளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ட்ரெடிஷனல் சோட்டா கான் கராத்தே நிறுவனம் சார்பாக கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அறந்தாங்கி, அலஞ்சிறங்காடு, குருகுலம் பள்ளி சிலட்டூர் மற்றும் சுப்பிரமணியபுரம் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

in national karate sports pudukottai childrens won 92 medals
கராத்தே போட்டியில் புதுக்கோட்டை சிறுவர்கள் சாதனை

போட்டி அகில இந்திய அளவில் நடைபெற்றாலும் இடைவிடாத கடின பயிற்சியின் மூலம் 22 தங்கப்பதக்கங்கள், 26 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 44 வெண்கலப்பதக்கங்கள் உட்பட ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் முதலிடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராஃபி மற்றும் பணம் முடிப்பாக ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பெற்று தமிழ்நாட்டிற்கும் புதுகை மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

போட்டிக்கான பயிற்சியை ட்ரெடிஷனல் சோட்டா கான் கராத்தே நிறுவனத்தின் மாநில தலைமை பயிற்சியாளர் ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்ட தலைமை பயிற்சியாளர் சுரேஷ், போட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், துணை பயிற்சியாளர்கள் முருகேசன், ராஜா, பொன்னையா ஆகியோர்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வீரர்-வீராங்கனைகளை வெற்றி பெறச்செய்தனர்.

காராத்தே போட்டியில் புதுக்கோட்டை சிறுவர்கள் சாதனை

இதையடுத்து, தேசிய அளவில் சாதனை நிகழ்த்திய இளம் கராத்தே விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய மாநில அரசுகள் தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உதவி செய்தால் ஏழை எளிய இளம் போட்டியாளர்கள் மென்மேலும் சாதிப்பார்கள் என்பதே வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:92 பதக்கங்களுடன் கராத்தேவில் தேசிய சாதனை படைத்த தமிழக அணி..
பதக்கங்களை வாங்கி குவித்த புதுக்கோட்டை வீரர் மற்றும் வீராங்கனைகள்..

Body:கேரளா மாநிலம் திருச்சூரில் 25 ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டி வி கே என் மேனன் உள்ளரங்க ஆடுகளத்தில் நடைபெற்றது.
போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ட்ரெடிஷனல் சோட்டா கான் கராத்தே ஆர்கனைசேஷன் சார்பாக கொத்தமங்கலம் கீரமங்கலம் வடகாடு மாங்காடு அறந்தாங்கி அலஞ்சிறங்காடு குருகுலம் பள்ளி சிலட்டூர் மற்றும் சுப்பிரமணியபுரம் பயிற்சி பள்ளியை சேர்ந்த 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர் போட்டி அகில இந்திய அளவில் நடைபெற்றாலும் இடைவிடாத கடின பயிற்சியின் மூலம் 22 தங்கப்பதக்கம் 26 வெள்ளிப்பதக்கம் 44 வெண்கலப்பதக்கம் உட்பட ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் முதலிடம் பெற்று சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் பணம் முடிப்பாக ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்று தமிழ்நாட்டிற்கும் புதுகை மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். போட்டிக்கான பயிற்சியை ட்ரெடிஷனல் சோட்டா கான் கராத்தே organization மாநில தலைமை பயிற்சியாளர் திரு ஜீவானந்தம் புதுக்கோட்டை மாவட்ட தலைமை பயிற்சியாளர் திரு சுரேஷ் போட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு தமிழரசன் மற்றும் துணை பயிற்சியாளர்கள் முருகேசன் மற்றும் ராஜா மற்றும் பொன்னையா ஆகியவர்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெறச் செய்தனர்.
தேசிய அளவில் சாதனை நிகழ்த்திய இளம் கராத்தே விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அந்த பயிற்சி மையங்களில் பொதுமக்கள் பாராட்டு வரவேற்பு கொடுத்தனர் மேலும் பயிற்சியாளர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அக்குழு தெரிவித்தனர். இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய மாநில அரசுகள் தேசிய மற்றும் உலக போட்டிகளில் கலந்து கொள்ள உதவி செய்தால் ஏழை-எளிய இளம் வீரர் வீராங்கனைகள் மேலும் சாதிப்பார்கள் என்பதே ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Conclusion:
Last Updated : May 1, 2019, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.