ETV Bharat / state

இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை - sivadoss

புதுக்கோட்டை: பொன்னமராவதி விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸை, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ்
author img

By

Published : Apr 24, 2019, 5:20 PM IST

Updated : Apr 24, 2019, 5:39 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள், ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

19ஆம் தேதி வரை நீடித்த இந்த போராட்டம் கலவரமாக மாறி காவல்நிலையத்தின் மீது கற்கள் வீசப்பட்டன. இந்தக் கலவரத்தில் மூன்று காவல்துறையினர் பலத்த காயமடைந்தனர். மேலும், காவல்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறி பதற்றமான சூழல் உருவானதையடுத்து பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டார். 144 தடை உத்தரவுக்கு பிறகு பொன்னமராவதியில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Intro:ஒரு சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவான தகவல் பரப்பப்பட்ட சம்பவத்தை அடுத்து பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ்சை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..

Body:ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18ஆம் தேதி இரவு முதல் அந்த பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர் 19ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது காவல்நிலையத்தின் மீது கற்கள் வீசப்பட்டன சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர் மேலும் 5 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து கடந்த 19ஆம் தேதி பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டார் இந்நிலையில் மூன்று நாட்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு பொன்னமராவதியில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்நிலையில் இலுப்பூர் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சிவதாஸ்சை பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த போது தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அது மட்டுமின்றி கலவர சம்பவத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தபோது அதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் அதனாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Conclusion:
Last Updated : Apr 24, 2019, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.