புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகேயுள்ள மறவாமதுரை கிராமத்தில் வசித்துவருபவர் சுப்பையா (50), இவரது மனைவி கருப்பாயி (45). இதில், கருப்பாயி கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், கருப்பாயி சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை தாங்கிக் கொள்ளமுடியாத சுப்பையா இன்று தனது வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதைக்கண்ட அவரது மகன் அதிர்ச்சியடைந்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: