புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த உள்ள பூவற்றக்குடி பகுதியை சேர்ந்த தம்பதி துரை, செல்வராணி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22) என்ற இளைஞருக்கும் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னையில், துரை, செல்வராணி தம்பதி மாரிமுத்தை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 தேதி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் துரை, செல்வராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்றுவந்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்பை நீதிபதி அப்துல் காதர் இன்று வழங்கியுள்ளார். துரை, செல்வராணி ஆகியோர் மாரிமுத்துவை கொலை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இருவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 400 அபராதம் விதக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால், ஒரு வருடம் தண்டனை நீட்டிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து துரையை காவல் துறையினர் அறந்தாங்கி கிளை சிறைக்கும், செல்வராணியை திருச்சி பெண்கள் மத்திய சிறைக்கும், அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மனைவி-மகளை கொலை செய்த ஜவுளி வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!