ETV Bharat / state

படிக்கும் போதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி - பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி

புதுக்கோட்டை: படிக்கும் போதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும்  அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இயலை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்துப் பாராட்டினார்.

படிக்கும் போதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி
author img

By

Published : Jun 28, 2019, 9:47 PM IST

ஊடகத்துறையில் பெண்களின் எண்ணிக்கை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் உள்ளது. இந்த சூழலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு இத்துறையில் ஆர்வம் என்றால் பாராட்டியே ஆக வேண்டும். ஊடகத்துறையில் செய்தி சேகரிப்பவர்களுக்கு வடிவமைக்க தெரியாது. அப்படி வடிவமைக்க தெரிந்தவர்களுக்கு செய்தி சேகரிக்க தெரியாது. இரண்டும் தெரிந்தவர்களுக்கு செய்தி ஆசிரியர் ஆகும் வாய்ப்பு குறைவுதான். இவை அத்தனையும் தெரிந்தாலும் பத்திரிக்கைத் துறையில் தலைமை ஆசிரியர் ஆவது மிகவும் சிரமம்.

பள்ளி மாணவப்பருத்திலே தனி இதழ்கள் நடத்தியவர்கள் பலர் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் தற்கால அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோடைகால விடுமுறையில் நாளிதழ் வடிவமைப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியில் மாணவி க. இயல் சேர்ந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் அவர் நல்ல பத்திரிக்கை என்ற மாத இதழை தானாகவே வடிவமைத்து தனது திறமையை வெளிப்படுத்தி, கல்வித்துறை அலுவலர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். அவர் வடிவமைத்த நல்ல பத்திரிக்கையை வெளியிடும் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது:

"ஓர் அரசுப் பள்ளி மாணவி பத்திரிக்கையை வடிவமைப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். இதை பற்றி நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்றார். பின்னர் அவர் மாணவி இயலிடம், நீ எவ்வாறு உனது பெற்றோரை பார்த்து கற்றுக்கொண்டாயோ அதை போல் உன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கும் நீ கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மாணவி சு.க. இயல் பேசுகையில்,

"என் அப்பா போட்டோகிராஃப்ராக இருக்கிறார். தினமும் நாங்கள் செய்தித்தாள் வாங்கி அதை படிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதை பார்க்கும்போது இதை எப்படித் தயார் செய்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அப்போது என் அப்பாவிடம், எந்த சாஃப்ட்வேரில் இதை வடிவமைக்கிறார்கள் என்று கூறினால், நானும் அதே சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்துகொண்டு நாளிதழை வடிவமைப்பேன் என கேட்டேன். இதற்கு, என் அப்பாவும் வீட்டில் இருக்கும் கணினியில் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொடுத்தார்.தினமும் அதில் என்ன இருக்கிறது என்று கற்றுக் கொள்வதை வழக்கமா வைத்து கொண்டு, 15 நாட்களில் ஓரளவிற்கு கற்றுக்கொண்டேன்.

_PDK_
நல்ல பத்திரிக்கை வெளியிட்டதற்காக, மாணவி இயலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பராட்டு

நான் தயாரித்த நாளிதழுக்கு நல்ல பத்திரிக்கை என பெயர் வைத்தேன். எனது ஆசை எல்லாம் பிற்காலத்தில் ஒரு பத்திரிக்கையாளராக வரவேண்டும் என்பதுதான். பத்திரிக்கையாளராக நல்ல செய்திகளை மக்களுக்கு தர வேண்டும். பொதுமக்களும் கடையில் சென்று நல்ல பத்திரிக்கை தாங்க என கேட்டு படிக்க வேண்டும் என்பதே. தற்போது நான் பள்ளியில் படிப்பதால் என்னால் நாளிதழ் வெளியிட இயலாது.

எனவே நான் படிக்கும் பள்ளியில் நடக்கும் நல்ல விஷயங்கள் ,நமது மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்து மாதம், மாதம் நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்குவேன் .

இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி முகநூல், வாட்ஸ்ஆப், போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு நல்ல பத்திரிகையின் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் திட்டம் வைத்திருக்கிறேன். இன்னும் அறிவியலில் அடுத்தக்கட்ட வளர்ச்சிகள் வரும்பொது அதையும் அப்டேட் செய்துகொள்வேன். தற்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், என்னை நேரில் அழைத்து பாராட்டியதையும் ,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், என் பள்ளிக்கு வந்து என்னை பாராட்டி பரிசு வழங்கியதை நினைக்கும் பொது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தொழில்நுட்பங்களையும் இணையதளத்தையும் தவறாக பயன்படுத்தி வரும் சில மாணவர்கள் மத்தியில் மாணவி இயல் இத்துறையில் சாதிக்க நினைப்பது சற்று புருவத்தை உயர்த்த வைக்கிறது. மாணவி இயலுக்கு ஈ.டி.வி பாரத் சார்பாக அன்பு வாழ்த்துக்கள்

Intro:Body:படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு

படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் திருவரங்குளம் ஒன்றியம் ஈட்டித் தெரு அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இயலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஊடகத்துறையில் பெண்களின் எண்ணிக்கை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் உள்ளது.இந்த சூழலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு இத்துறையில் ஆர்வம் என்றால் பாராட்டியே ஆக வேண்டும். ஊடகத்துறையில் செய்தி சேகரிப்பவர்களுக்கு வடிவமைக்க தெரியாது.வடிவமைக்க தெரிந்தவர்களுக்கு செய்தி சேகரிக்க தெரியாது.இரண்டும் தெரிந்தவர்களுக்கு எடிட்டர் ஆகும் வாய்ப்பு குறைவு.இவை அத்தனையும் தெரிந்தாலும் பத்திரிக்கை முதலாளி ஆவது சிரமம்.பள்ளி மாணவப்பருத்திலே தனி இதழ்கள் நடத்தியவர்கள் பலர் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே.அந்த வகையில் தற்கால அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோடைகால விடுமுறையை பயன்படுத்தி நாளிதழ் வடிவமைப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியினை பெற்று அப்பயிற்சியின் மூலம் நல்ல பத்திரிக்கை என்ற மாத இதழை தானாகவே வடிவமைத்து தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் கல்வித்துறை அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்று இருக்கின்றார் அரசுப்பள்ளி மாணவி க.இயல்

மாணவி க.இயல் வடிவமைத்த நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: ஓர் அரசுப் பள்ளி மாணவி பத்திரிக்கையை வடிவமைப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல் ஆகும்.நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார்.பின்னர் மாணவி இயலிடம் நீ எவ்வாறு உனது பெற்றோரை பார்த்து கற்றுக்கொண்டாயோ அதை போல் உன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கும் நீ கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மாணவி சு.க.இயல் கூறியதாவது:
என் அப்பா போட்டோகிராபராக இருக்கிறார் தினமும் நாங்கள் நியூஸ் பேப்பர் வாங்குவோம் அதனை படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன் அதை பார்க்கும்போது இதை எப்படித் தயார் செய்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது அப்போது என் அப்பாவிடம் கேட்டேன் அவர் இந்த சாப்ட்வேரில் தான் செய்கிறார்கள் என்று கூறினால் அதை எனக்கும் இன்ஸ்டால் பண்ணி தாங்க என்று கேட்டபோது என் அப்பா அதை செய்து கொடுத்தார் தினமும் அதில் என்ன இருக்கிறது என்று கற்றுக் கொள்வதை வழக்கமா வைத்து கொண்டேன் 15 நாட்களில் ஓரளவிற்கு கற்றுக்கொண்டேன். நான் தயாரித்த நாளிதழுக்கு நல்ல பத்திரிக்கை என பெயர் வைத்தேன்.எனது ஆசை எல்லாம் பிற்காலத்தில் ஒரு பத்திரிக்கையாளராக வரவேண்டும்.பத்திரிக்கையாளர் ஆகி நல்ல செய்திகளை மக்களுக்கு தர வேண்டும். பொதுமக்களும் கடையில் சென்று நல்ல பத்திரிக்கை தாங்க என கேட்டு படிக்க வேண்டும் என்பதே. தற்பொழுது நான் பள்ளியில் படிப்பதால் என்னால் நாளிதழ் வெளியிட இயலாது.எனவே நான் படிக்கும் பள்ளியில் நடக்கும் நல்ல விஷயங்கள் ,மற்றும் நமது மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்து மாதம் மாதம் நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்குவேன் . இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி முகநூல் வாட்ச்அப் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு நல்லபத்திரிகையின் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் திட்டம் வைத்திருக்கிறேன். இன்னும் அறிவியல் வளர்ச்சிகள் வரும்பொழுது அதையும் அப்டேட் செய்துகொள்வேன்.தற்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் என்னை நேரில் அழைத்து பாராட்டியதையும் ,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் அவர்கள் என் பள்ளிக்கு வந்து என்னை பாராட்டி பரிசு வழங்கியதை நினைக்கும் பொழுதும் என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார்.

தொழில்நுட்பங்களையும் இணையதளத்தையும் தவறாக பயன்படுத்தி வரும் சில மாணவர்கள் மத்தியில் மாணவி இயல் இத்துறையில் சாதிக்க நினைப்பது சற்று புருவத்தை உயர்த்த வைக்கிறது.
மாணவிக்கு ETV barath ன் அன்பு வாழ்த்துக்கள்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.