ETV Bharat / state

கோவில் பொருட்கள் திருட்டு சம்பவம்: சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு...! - கோயில் பொருட்கள் கொள்ளை

புதுக்கோட்டை அருகே கோயில் பொருட்களை திருடி ஆட்டோவில் தப்பமுயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை
author img

By

Published : Nov 17, 2022, 8:27 AM IST

கிள்ளனூர்: புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூரில் பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து விட்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்ப முயன்றது. திருட்டு கும்பல் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் விரட்டிப் பிடிக்க முயன்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்ற பொது மக்கள் மச்சுவாடி பகுதியில் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.

ஆட்டோவில் இருந்த இரு சிறுமிகள், பெண் உள்பட ஆறு பேரை பொது மக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. திருட்டுக் கும்பல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர். மேலும் பொது மக்கள் தாக்கியதாக கூறப்படும் 10 வயது சிறுமி கற்பகாம்பிகா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், திருட்டுக் கும்பல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஸ்வரசாமி, மெய்யசாமி மற்றும் மகள்கள் கற்பகாம்பிகாள், ஆதிலட்சுமி ஆகியோர் என தெரிய வந்தது.

கிள்ளனூர் அதனை சுற்றியுள்ள ஆழ்வாபட்டி, கீழையூர், அரையான்பட்டி, வாரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கோயில்களின் வெளியே மாட்டப்பட்டிருந்த வெண்கல குத்துவிளக்கு மணி உள்ளிட்ட பொருட்களை கும்பல் திருடி வந்தது தெரியவந்தது. மேலும் திருடிய பொருட்களுடன் ஆட்டோவில் தப்ப முயன்ற போது பொது மக்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சுமார் 200 கிலோ மதிப்பிலான வெண்கல பொருட்களை உடையாளிபட்டி போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இதேபோல் கீரனூர் பகுதியில் உள்ள கோயில்களிலும் வெண்கல பொருட்கள் திருடு போய் இருப்பது தெரிய வந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி கற்பகாம்பிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், சிறுமி கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி மீது அவளது தந்தையே தாக்குதல் நடத்தியதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், உண்மையான கொலையாளி யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குத்துவிளக்கோடு ஜெண்ட் ஆன களவாணி கும்பல்: சேஸிங்கில் பிடித்த பாய்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.