ETV Bharat / state

ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட்டு.. பலே கும்பலை கைது செய்த காவல்துறை!

pudhukottai atm robbery gang arrested: பொன்னமராவதியில் வங்கி ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி நூதன முறையில் பணம் திருடிய மூன்று பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் உதவுவது போல், ஏடிஎம் கார்டை மாற்றி பணம் திருடிய கும்பல் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:13 PM IST

புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லட்சுமணன்(39). இவர் கடந்த 7ஆம் தேதி தனது மனைவி ஏடிஎம் அட்டையைக் கொண்டு பொன்னமராவதி புதுப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார்.

அப்போது ஏடிஎம் மையத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், லட்சுமணனுக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க உதவி செய்துள்ளார். அந்தக் கார்டில் பணம் வராததால், வீட்டிற்குத் திரும்பிச் சென்ற லட்சுமணன் தனது மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்சுமணனின் மனைவி அக்கவுண்டில் இருந்து பணம் 40 ஆயிரம் எடுக்கப்பட்டது செல்போன் குறுஞ்செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் தனியார் நிறுவனத்தில் இந்த ஏடிஎம் கார்டு மூலம் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கப்பட்டுள்ளது. அப்போது தான் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது, உதவி செய்வது போல் நடித்து கார்டை மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லட்சுமணன் தான் ஏடிஎம் மையத்தில் ஏமாந்ததையும், அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்தது குறித்தும் பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம், ஏட்டு சார்லஸ், காவலர்கள் விஜய், கலா ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே வந்த குளித்தலை கீழனங்கவரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் சரவணக்குமார் (29), காஞ்சிபுரம் நன்மங்கலம் தங்கராஜ் மகன் தமிழ்ச்செல்வன்(28), மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவி லெட்சுமி (27) ஆகியோரை விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஏடிஎம் மைய திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர் அவர்களிடமிருந்த 20 ஆயிரம் ரொக்கம், 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 40 போலி ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கும்பல் எங்கெல்லாம் ஏடிஎம் கார்டை திருடினார்கள், மேலும் இவர்களுக்கு வேறு யாரேனும் உடந்தையாக உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் கார்டை பறிகொடுத்து, விவசாயி நெல் விற்பனை செய்த பணத்தை பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் கார்டை மாற்றி கைவரிசையில் ஈடுபடும் மோசடி கும்பல்களால் புதுக்கோட்டையில் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.