ETV Bharat / state

பெண்ணிற்கு சாக்லெட் கொடுத்த மாணவர்களை தாக்கிய கும்பல் - இருதரப்பினரிடையே மோதல் - புதுக்கோட்டை மாவட்ட குற்றச் செய்திகள்

ஆலங்குடி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிற்கு பள்ளி மாணவர்கள் சாக்லெட் கொடுத்த விவகாரத்தில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat பெண்ணிற்கு சாக்லெட் கொடுத்த மாணவர்களை தாக்கிய கும்பல்

author img

By

Published : Feb 10, 2023, 3:29 PM IST

பெண்ணிற்கு சாக்லெட் கொடுத்த மாணவர்களை தாக்கிய கும்பல்

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகேவுள்ள மாங்கோட்டை ஊராட்சி தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் தினமும் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.9) மாணவர்களின் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால், பேருந்தில் இருந்த அனைவருக்கும் சாக்லேட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது பேருந்தில் இருந்த மாங்கோட்டை ஊராட்சி வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சாக்லேட் கொடுத்ததாகவும், இதனால் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் இதை எதிர்த்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பிறகு அவரவர்கள் பணிக்கும், பள்ளிக்கும் சென்று விட, மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது மாங்கோட்டை பகுதியில் பேருந்தை மறித்த வடக்குப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் மூவர், தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பகுதியைச் சேர்ந்த அஜூந்திரன் (22) உட்பட்ட மூவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த தெற்குப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர்கள், மூவரையும் ஆலங்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மூவரையும் தாக்கிய ஆகாஷ் உள்ளிட்ட நான்கு நபர்களையும் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தைக் கைவிட்டனர். இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் சாதிய மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பம் ஆகாமலேயே குழந்தை.. இளம்பெண்ணின் பலே நாடகம் அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.