ETV Bharat / state

அண்டாவை வைத்து பணம் வசூல் செய்யும் கட்சி: யாரை விமர்சிக்கிறார் விஜயபாஸ்கர்? - ஜாபர் அலி பிறந்தான்

''தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் என்றால் ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி, அந்நாட்களில் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் அண்டா வைத்து பணம் வசூல் செய்கிறது'' என திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 3:15 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவருமான ஜாஃபர் அலியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி ஜாஃபர் அலியின் மகன் முகமது இப்ராஹிம் ஏற்பாட்டில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு 9 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விஜய் ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் உதயா சக்தி தலைமையில், புதுக்கோட்டை டவுன்ஹாலில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுகவின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏழை எளிய மக்களின் மனம் குளிரும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், பிறருக்கு ஏதாவது கொடுத்து மகிழ்வதில் ஜாஃபர் அலிக்கு நிகர் அவரே தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜாஃபர் அலி எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தான் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு நட்பு ரீதியாக சென்றிருந்ததாகவும், அந்த திருமண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இரண்டு பக்கமும் திமுக சார்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் படங்கள் அடங்கிய வரவேற்பு பதாகைகள் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், இதனைக் கடந்து அந்த திருமண நிகழ்ச்சிக்கு தான் சென்ற நிலையில், 'அந்த திமுக நிர்வாகி பரவாயில்லை அண்ணே, எங்க திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் வராத நிலையில் நீங்கள் வந்து என்னை கௌரவப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது' என்று தெரிவித்தார் எனக்கூறினார்.

அப்படி தன் கட்சி தொண்டர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத அளவிற்கு திமுக அமைச்சர்களுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை எனவும் விஜயபாஸ்கர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்கள் நினைத்தால் தான் நாம் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளை அனுபவிக்க முடியும் எனவும் அவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தால், அடுத்த நொடியே, நிலைமை தலைகீழாக மாறிவிடும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் அதிமுக தொண்டர்களை மதிக்கும் கட்சியாக உள்ளது எனவும், இதனால்தான் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தலைவர்களின் நினைவு நாள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் என்றால் ஏழை எளியோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும், அதை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி வாழ்த்துக்கூற வருபவர்களிடம் அண்டாவை வைத்து பணம் வசூல் செய்வதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள், அனைத்து ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.