தமிழ்நாட்டில், முதல்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டில் இரண்டரை கோடி கரோனா தடுப்பு மருந்து பாதுகாத்து வைப்பதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
முதல்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பு மருந்து முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: உருமாறிய கரோனாவிற்கும் ஒரே தடுப்பூசிதான்- சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்