புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் வரும் 2023ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி பகுதியில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டி தச்சங்குறிச்சி தூய அடைக்கல அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல்,மேடை, தடுப்புகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு