ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு! - attacked

புதுக்கோட்டை: ஆலங்குடியில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை ஆறு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிச் சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

father-and-son-got-attacked-
author img

By

Published : Jul 16, 2019, 8:01 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை தெற்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன்(58) அவரது மகன் முருகானந்தம்(28). இவர்கள், பாரதி தாசன் சாலையில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், முருகானந்தத்திற்கும் ஆலங்குடியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டதில், ஜபருல்லா காயமடைந்தார்.

இதையடுத்து, முருகானந்தம் அவரது தந்தை கணேசன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, அவர்களுக்கு சொந்தமான பிளக்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, ஜபாருல்லா மகன் முஸ்தபா என்பவரின் தலைமையில் ஆறு பேர் கொண்ட கும்பல், இருவரையும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் கணேசனின் உறவினர்கள், ஆலங்குடி கடைவீதியில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடை, உள்ளிட்ட நிறுவனங்களை அடித்து சேதப்படுத்தியும், பள்ளிவாசலில் சிலர் கல்வீச்சியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆலங்குடியில் பதற்றம் நிலவுவதால், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Intro:Body: இரு சமூக முன்விரோத காரணமாக 6 பேர் கொண் ட கும்பல், தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு. பள்ளிவாசல் மீது கல்வீச்சு, கடைகள் அடைப்பு.
                                                      
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் தந்தையையும் மகனையும் 6 -பேர் கொண்ட கும்பல் அரிவாள் வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடியில் நேற்றிரவு பாரதி தாசன் சாலையில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் தொழில் செய்து வரும் மாங்கோட்டை தெற்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குமரசாமி மகன் கணேசன் 58. மற்றும் அவரது மகன் முருகானந்தம் 28.
முருகானந்தத்திற்கும் ஆலங்குடியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் முருகானந்தம் தாக்கியதில் ஜபருல்லா காயமடைந்தார். இது குறித்து காவல்நிலையம் வரை புகார் சென்று பின்னர் இருதரப்பின் உறவினர்களும் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் முருகானந்தம் மற்றும் அவர் தந்தை கணேசன் ஆகியோர் 14ஆம் தேதி நள்ளிரவில் ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான பிளக்ஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது ஜபாருல்லா மகன் முஸ்தபா என்பவரின் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் உருட்டுக் கட்டையாலும் அரிவாள் போன்ற ஆயுதங்களாலும் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
         படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல்சிகிசிசைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மீண்டும் அங்கிருந்த தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து கணேசனின் உறவினர்களுக்குத் தெரியவர ஆலங்குடி கடைவீதியில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடை மெடிக்கல் உள்ளிட்ட நிறுவனங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்ததாக அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சங்கீதா, நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து விட்டு நிலைமை மோசமாகி விடும் என்பதை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தவுடன் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜூம் வந்து சம்பவத்திற்குப் பின்னால் யாரேனும் இருக்கக் கூடுமென்று விசாரணை மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணனும் வந்து விட்டார்.
இரு தரப்பினருக்கும் உள்ள பிரச்சினை இரு மதங்களுக்கான மோதலாக வெடித்துவிடக் கூடாது என்பதால் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே ஆலங்குடியில் உள்ள பள்ளிவாசலிலும் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதனால் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இருந்து ஆயுதப்படை போலீசார் கொண்டு வந்த குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் ரகுமானின் தம்பி முஸ்தபா என்பவர் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்த கும்பல் ஒன்று வம்பனுக்கும் திருவரங்குளத்திற்கும் இடையில் உள்ள காட்டுப் பகுதியில் வழிமறித்து அரிவாளால் வெட்டிச் சென்று விட்டது. அது குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது.
இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் ஆலங்குடி அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
                                                      
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.