ETV Bharat / state

அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் அபகரிப்பு? மறுக்கும் பாஜக நிர்வாகி - பின்னணி என்ன? - பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு முறைகேடாக மாற்றிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் அந்த நிலம், தனது மூதாதையர்களுக்கு சொந்தமானது என நியாயப்படுத்தியுள்ளார், செல்வம் அழகப்பன். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Complaint against BJP executive
பாஜக நிர்வாகி மீது புகார்
author img

By

Published : Apr 3, 2023, 10:32 PM IST

பாஜக நிர்வாகி மீது புகார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர், செல்வம் அழகப்பன். இவர் நச்சாந்துபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தமது பெயருக்கு முறைகேடாக மாற்றிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் உள்ள சமுதாய கிணற்றை மூடிவிட்டு அங்கு சொகுசு விடுதி கட்டியதாகவும், அறக்கட்டளைக்கு சொந்தமான இடமாக கூறப்படும் பகுதியில் வசிப்பவர்களை மிரட்டி ரூ.15 லட்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். சட்டத்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட வி.லட்சுமிபுரத்தில் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அதற்காகவே தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார். இதன் பின்னணியில் திமுகவினர் இருப்பதாகவும் செல்வம் அழகப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 30-11-1970ல் என்னுடைய பாட்டி அடைக்கம்மை ஆச்சி - அய்யா முத்துராமன் ஆகியோர் பெயரில் சம்பந்தப்பட்ட நிலம் பதிவாகியுள்ளது. ஆனால் 28-02-1971ல் பிறந்த நான், அந்த சொத்தை எவ்வாறு அபகரிக்க முடியும்? என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. மேலும் எனது பாட்டி பெயரில் உள்ள சொத்துக்களை கடந்த 22-01-2022 அன்று 52 ஆண்டுகளுக்குப் பிறகு என் பெயரில் மாற்றியுள்ளேன். சுமார் 52 ஆண்டுகளாக இந்த சொத்து வேறு யார் பெயரிலும் இல்லை. அவ்வாறு யாருக்கும் உரிமை இல்லாத பட்சத்தில், ஒரு சிலர் கட்டடம் கட்டி வசித்து வருகின்றனர்.

ஆனால், என் மீது புகார் அளித்தவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை, முத்துக்கருப்பன் என்பவர் 1994ல் அவர்களுக்கு பதிவிடப்படாத பத்திரத்தை கொடுத்ததாக கூறுகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்புக்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் நான் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

இதற்கிடையே செல்வம் அழகப்பன் பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில், அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அவர், "நான் பேசிய அந்த ஆடியோ 2021ல் வெளியானது. அப்போது நான் மாவட்ட தலைவராக இல்லை. என்னுடைய நிலத்தில் வீடு கட்டி இருப்பதால் இந்த இடத்தை அவர்களுக்கு குறைந்த விலையில் விற்று, தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. யாருடைய சொத்துக்களையும் அபகரிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. சம்பந்தப்பட்ட இடத்தில் அவர்கள் வீடு கட்டியது போக மீதியுள்ள இடத்தை நான், வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, மோடி திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரவும் தயாராக உள்ளேன்" என்றார்.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக தாம் செயல்படுவதாக கூறப்படும் புகாரில் எந்த உண்மையும் இல்லை என செல்வம் அழகப்பன் கூறினார்.

இதுகுறித்து மேட்டுப்பட்டியை சேர்ந்த அழகு பாண்டியன் கூறுகையில், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கவில்லை. அந்த நிலம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் மனு அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிலம் இருப்பது ஒரு இடம், கிணறு இருப்பது ஒரு இடம். அந்தக் கிணறு முன்னதாகவே இடிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் அந்த கிணறு மூடப்பட்டது. மேட்டுப்பட்டி கிராமத்தில் நான்கு சமூக மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். ஆனால் நிலம் சம்பந்தமாக புகார் அளித்தவர்கள் சாதியைக் காரணம் காட்டி செல்வம் அழகப்பன் மீது புகார் அளித்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: வராத தண்ணீருக்கு வரி.. டேங்க் இருந்தும் அவதி.. பட்டியல் சமூக மக்களின் த(க)ண்ணீர் கதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.