ETV Bharat / state

அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Enforcement Directorate Raid: புதுக்கோட்டையில் அரசு மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

enforcement-directorate-raid-pudukkottai-sand-contractor-ramachandran-house-and-companies
புதுக்கோட்டை அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமசந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை விடிய விடிய சோதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 3:24 PM IST

புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை (செப்.12) தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை விடிய விடிய நடைபெற்று தற்போது (செப்.13) இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் அதிமுக ஆட்சி காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சி காலத்தில் சரி மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். இது தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!

இந்த நிலையில், திமுக ஆட்சி வந்த பிறகும் அவர் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளையும் பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து பணியாற்றி வருகிறார். 2016 - 2017 ஆகிய வருடங்களில் சட்டத்திற்கு விரோதமாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் சோதனைகள் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கடந்து 2016ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட விசாரணையாக தற்போது புதுக்கோட்டையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நிஜாம் காலனி, சமுத்திரா அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள நிறுவனத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்து இடங்களில் தற்போது சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் உள்ள முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள அவரது வீடு, கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்குவாரியிலும், ராமச்சந்திரன் உறவினரான சண்முகம் எனபவரது கிராவல் மண் குவாரியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறதா அல்லது வேறு ஏதேனும் புது வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறதா என்று சோதனை முடிந்த பிறகு தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமச்சந்திரனுடைய நண்பரும், தொழிலதிபருமான மணிவண்ணன் வீட்டில் நேற்று அமலாக்க துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், மணல் ஒப்பந்தக்காரருமான கரிகாலன் வீடுகளில் தற்பொழுது மூன்று வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் அதிமுகவின் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.