புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்த தொகுதி அதிக தேர்தல் செலவினம் கொண்ட தொகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொகுதியில் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், புதுகோட்டை சார்லஸ் நகரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின்ன் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான முருகேசன் என்பவரது வீட்டில் தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ்குமார் மீனாள் தலைமையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.