ETV Bharat / state

வெள்ள அபாய பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

புதுக்கோட்டை மாவட்ட நகர் பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

District Collector inspection
District Collector inspection
author img

By

Published : Dec 3, 2020, 8:44 PM IST

புதுக்கோட்டை: நகராட்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று(டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(டிச.3) புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் மழைநீர், வாய்க்கால்கள் வழியாக செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அதன்படி புதுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர், வரத்து வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய், காட்டுப்புதுக்குளம் வரத்து வாரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள், தாழ்வான பகுதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது மழை காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அலுவலர்கள் மூலம் பொதுப்பணித்துறை கண்காணிக்கப்பட்டுவருகிறது.

அதேசமயம் ஏரிகள், குளங்களிலும் மழைநீர் நிரம்பி எவ்வித தடையின்றி மழைநீர் வெளியேறும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களிலுள்ள பள்ளி கட்டடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்து மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு மூலம் வழங்கப்படும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில், மாவட்டத்தில் தற்பொழுது மழை காரணமாக சிறியளவில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலுள்ள முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக கவரில் பத்திரப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பேரிடர் முன்னேற்பாடு தொடர்பான பணிகள், தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322 222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பது ரஜினியின் அதீத நம்பிக்கை: திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.