கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் தமிழ்நாட்டில் நேற்றிலிருந்து (ஏப். 20) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள் இயங்குவது இரவு 9 மணிமுதல் நிறுத்தப்பட்டது. இதேபோன்று வணிகர்களும் கடைகளை 9 மணியிலிருந்து அடைத்தனர். இதனால், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆய்வு
இரவு நேர ஊரடங்கின் பணிகள் நடைபெறுகின்றவா என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்து நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு இருந்ததைக் கண்ட ஆட்சியர், அவர்களை அழைத்துப் பேசி உடனடியாக இரவில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்து நகராட்சி வாகனத்தில் அவர்களை அனுப்பிவைத்தார்.
மேலும், காலையில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்படுவதற்கும் ஏற்பாடுசெய்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு எல்லையில் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணி!'