ETV Bharat / state

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக தொழிற்சங்க மையம் நூதன ஆர்ப்பாட்டம்! - ஜனநாயக தொழிற்சங்க மையம்

புதுக்கோட்டை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜியோ செல் ஏஜென்சி நிறுவனம் முன்பு ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில், ஜியோ சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களை உடைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Democratic Trade Union Center Innovative Demonstration Demanding the Abolition of Agricultural Laws

author img

By

Published : Dec 16, 2020, 9:40 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டையில் ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜியோ ஏஜென்சி கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜியோ சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களை சாலையில் வீசி உடைத்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக தொழிற்சங்க மையம் நூதன ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை கண்டித்தும் தொடர்ந்து கொட்டும் மழையிலும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 1000 கிலோ கடல் அட்டைகள் கடத்த முயற்சி: ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.