அறந்தாங்கி அருகே துறை அரசபுறத்தில் கூட்டுறவு நுற்பு ஆலை இயங்கிவருகிறது. அங்கு 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, அந்த ஆலையில் உள்ள பஞ்சு சேமிப்புக் கிடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், புகைமண்டலமாக காட்சியளித்த ஆலையைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவந்தது.
முதற்கட்ட விசாரணயில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பஞ்சு ஏற்றுமதி இறக்குமதியில் முறைகேடு இருப்பதால் ஆலை அதிகாரிகளே இந்த செயலை செய்திருக்கலாம் என்று பலரும் சந்தேகிக்கின்றனர்.