நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் இன்னும் தொற்று குறைந்தபாடில்லை.
முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி (சானிடைசர்) போன்ற பொருள்கள் அத்தியாவசிய பொருள்கள் ஆகிவிட்டன. எதை மறந்தாலும் முகக்கவசம் அணிய மறக்கக்கூடாது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது. கரோனாவுக்குப் பின் விதவிதமான துணிகளில், விதவிதமான கலர்களில் மாடல்களிலெல்லாம் முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர்.
கரோனா வைரஸ் போன்ற மொபைல் கேம், கரோனா பாடல், கரோனா குறும்படம், மூலிகை முகக்கவசம், புகைப்படத்துடன் கூடிய முகக்கவசம் என கரோனா பெரிய வரலாற்றையே படைத்துவிட்டது எனலாம். இந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கரோனா வைரஸின் அமைப்பு போன்ற தங்கத்தில் தயாரிக்கப்பட்ட காதணி விற்பனைக்கு வந்துள்ளது.
இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். புதுக்கோட்டையில் சந்தோஷினி நகைக்கடை உரிமையாளர் வீரமணி என்பவர்தான் இந்தக் காதணியை செய்துள்ளார்.
இவர் 2019ஆம் ஆண்டு ஒரு இன்ச் அளவில் தங்கத்தில் கிரிக்கெட் வேல்டு கப்பை செய்து அனைவரையும் வியக்கவைத்தவர். இவரின் இந்தக் கரோனா காதணியும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க... கோவிட்-19க்கு எதிராகச் செயலாற்றும் நானோ ஸ்பாஞ்சஸ்!