கரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் தற்போது இன்று 1100ஐ தாண்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 21) மட்டும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரை 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா வைரஸ் காரணமாக, மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து நோய்த்தொற்றை குறைக்கும் வகையில் ஜூலை 24 முதல் 31 வரை கடைகள் இயங்காது என புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.