கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ச்சியாக மக்களுக்கு அறிவுறத்தப்பட்டுவருகிறது. ஓவியங்கள், காணொலி, குறும்படம் ஆகியவற்றின் மூலம் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன. பல கலைஞர்கள் ஓவியத்தில் கதை சொல்லி வந்த நிலையில், விவசாயிகள் பூக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடவாளம், செட்டியாப்பட்டி, வம்பன், மாஞ்சான்விடுதி, ராயப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் ஏராளமான பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக விளைந்த பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் அண்ணாசிலை அருகே கரோனா வைரஸ் வடிவில் பூக்களால் அலங்கரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோரை பாராட்டும் விதமாக வாசகங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: பொய் சொல்லிட்டு ஊரு சுத்த முடியாது, அதுக்கு வந்துட்டு ஆப் மூலம் ஆப்பு!