தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள்: cVIGIL செயலி
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-2021 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26.02.2021 பிற்பகல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக தனிநபரோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ செயல்பட்டால், பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்கள் புகார்களை cVIGIL என்ற செல்போன் செயலி வாயிலாக தெரிவிக்கலாம்.
மேற்காணும் cVIGIL செயலியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை கீழ்கண்ட மூன்று வழிகளில் தெரிவிக்கலாம். புகைப்படம் வாயிலாக, ஆடியோ வாயிலாக, வீடியோ வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
cVIGIL செயலி பதிவிறக்கம் செய்யும் முறை:
முதலில் தங்களது கைப்பேசியில் play store app open செய்யவும். இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட cVIGIL செயலியை install செய்யவும். பதிவிறக்கம் செய்த cVIGIL செயலியை open செய்து தங்களது கைப்பேசி எண்ணை பதிவிடவும்.
பின்னர் கைப்பேசிக்கு வரும் நான்கு இலக்க OTP எண்ணை பதிவிடவும். இறுதியாக தங்களது புகார்களை மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு முறையில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.