புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டை அருகே உள்ள நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் - பார்வதி தம்பதியினர். இவர்களது மகள் மாலினி(19).
கடந்த 19ஆம் தேதி மதியம் கொள்ளைக்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற மாலினி(19) நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் இரவு பகலாக தேடியும் அவரை கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று(அக்.21) மதியம் வயலுக்கு சென்றபோது அங்கிருந்த கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டனர். அப்போது இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல் போன மாலினி என்ற கல்லூரி மாணவி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா, இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது!