புதுக்கோட்டை மாவட்டம் காடபிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதரனின் மகன் தமிழ்ச்செல்வன் (19). இவர் தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே விடுமுறை நாட்களை கழித்து வந்துள்ளார். நேற்றிரவு (ஜூன் 06) புதுக்கோட்டையில் சூரைக் காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் தமிழ்ச்செல்வன் யதார்த்தமாக வீட்டை விட்டு வெளியே வந்தபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.