ETV Bharat / state

கரோனா காரணமாக தேவைப்பட்டால் சந்தை மூடப்படும் - ஆட்சியர் கவிதா ராமு - புதுக்கோட்டை அண்மைச் செய்திகள்

மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதாக வந்த தகவலையடுத்து, ஆய்வுக்குப் பின்னர் தேவைப்பட்டால் சந்தை மூடப்படும் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா ராமு

author img

By

Published : Aug 12, 2021, 4:43 PM IST

புதுக்கோட்டை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக, உலக தாய்ப்பால் வார விழா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் விழாவில் அரங்கேறின. அப்போது நடைபெற்ற உறுதிமொழி நிகழ்வில், ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு வாகனத்தை, ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா ராமு

விழாவுக்குப் பின்னர் ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காதோர் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சந்தை பகுதிகளில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூடுவதாக தகவல் வந்துள்ளது. ஆய்வுக்கு பின்னர், தேவைப்பட்டால் சந்தை மூடப்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின்சார இணைப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.