புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி இளஞ்சியம். இவர் வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதனால் தினமும் ஆடு மாடுகளை அந்த பகுதியில் மேய்பது வழக்கம்.
வழக்கம் போல மாடுகளை நேற்று மேய்த்துக் கொண்டிருக்கையில் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இளஞ்சியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளஞ்சியம் அன்னவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது இலுப்பூர் சாங்கரான்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் சோலை. இலுப்பூர் மேலப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் கார்மேகம் ஆகியோர் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து தங்க சங்கலியை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.