ETV Bharat / state

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டத்தில் தொடரும் இழுபறி!

காவிரி-வைகை-குண்டாறு ஆறுகளின் உபரி நீர் செல்லும் நீர் வழித்தடத்தை மாற்ற கோரிக்கை வைத்த பொதுமக்களுடன் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 2:52 PM IST

request-to-change-the-water-channel-of-cauvery-vaigai-gundar-excess-water
காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் - தொடரும் இழுபறி!

புதுக்கோட்டை: சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டு கால கனவு திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூபாய் 14,000 கோடி மதிப்பீட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா என முன்னாள் முதலமைச்சர்கள் செயல்படுத்த முனைந்த திட்டம் காவிரி குண்டாறு வைகை இணைப்புத் திட்டம். விவசாயிகளின் பல ஆண்டு கால கனவாக நீடித்த இந்த திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 100 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் 48 கிலோ மீட்டர், திருச்சி மாவட்டத்தில் 18 கிலோ மீட்டர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 52 கிலோ மீட்டர் என மொத்தம் 118 கிலோ மீட்டரில் 6 ஆயிரத்து 941 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 52 கிலோ மீட்டர் கால்வாய் வெட்டும் பணி குன்னத்தூர், விராலிமலையில் ஆரம்பிக்கப்பட்டு இப்பணி புதுக்கோட்டை வட்டத்தில் இருக்கக்கூடிய கவிநாடு வரை கொண்டு செல்லப்பட்டு, புறகரை பண்ணை, அகரப்பட்டி வழியாக வெள்ளாறில் விடப்படுகிறது.இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் 18 ஆயிரத்து 566 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் திருப்பி விடுவதற்காக காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரி ஆற்றில் கட்டப்பட்ட கதவணைகளிலிருந்து இருந்து கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. மேலும் இதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணியும் தொடங்கியது. அப்போது ஒரு சிலர் இந்த திட்டத்திற்கான இணைப்பு பாதையை மாற்ற பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டமானது கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தை அரசியல் நோக்கோடு பார்க்காமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் உரிய நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் இத்திட்டத்திற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு இன்றைய சந்தை மதிப்பீட்டின்படி தொகையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் எனும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தற்பொழுது மாவட்டம் முழுவதும் நிலம் கையகப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியில் பல்வேறு கிராமங்கள் வழியாக நீர் வழித்தடம் செல்லும் பாதை அமைப்பதால் இதற்கு பல்வேறு கிராமங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து, திட்டத்தை வேறு பாதையில் கொண்டு போராட்டம் நடத்தியும் மற்றும் கோரிக்கை மனுக்களை வழங்கி வந்தனர்.

குறிப்பாக திருவப்பூர், கவிநாடு கண்மாய் அமைந்துள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு திடல் உள்ளதாலும் புறகரை பண்ணை, அகரப்பட்டி கிராமப் பகுதியில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் நீர் செல்லும் வழித்தடத்தை மாற்றி அமைக்க கோரி, அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும், பாதையை மாற்றி அமைக்க என கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகத்தை அளித்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒருபுறம் நெடுஞ்சாலை செல்வதாலும், மறுபுறம் நீர் வழித்தடம் அமைக்கப்பட்டால், இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 1,500 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னர் தாசில்தார் தரப்பில் இந்த திட்டத்தில் மாற்றம் இருக்காது என கூறியதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராம மக்கள் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் மீண்டும் காவிரி - வைகை - குண்டாறு திட்டம் செயல்படுத்தபடுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: INDIA vs BJP: 6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முந்துவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.