ETV Bharat / state

புதுக்கோட்டையில் சாதி மோதலுக்கு வித்திட்ட தலைமையாசிரியர்...! - 13 members

புதுக்கோட்டை: மாணவர் சேர்க்கை தொடர்பாக நடந்த முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு எழுந்த பிரச்னையில் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்குதல் நடத்தியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

13-பேர் மீது வழக்கு
author img

By

Published : Jun 16, 2019, 7:47 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள செவலூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பயின்று ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று பிரச்னை வந்துள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார் என்பவர் கூறுகையில், "எனது மகள் மதிவதனியை இங்குள்ள பள்ளியில் படித்து முடித்து விட்டு ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்கச் செல்லும்போதே, குழிபிறையில் இருக்கும் தனியார் பள்ளியிலிருந்து பெற்றோரை மூளைச்சலவை செய்வதற்காக வந்திருந்தனர்.

இங்குள்ள பள்ளியின் தலைமையாசிரியர் ஜி. கீதா அந்தப் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் என்று வலியுறுத்தினார். சரி என்று அப்போதைக்குச் சொல்லிவிட்டு, குழிபிறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டேன். அதனால் கோபமடைந்த தலைமையாசிரியர், எனது மனைவியைப் பள்ளிக்கு வரச்சொல்லி உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் படித்தாலும் மார்க் எடுக்கவிடாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

அது குறித்து பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலரிடம் மனுவாகக் கொடுத்தேன். அவர்கள் வந்து விசாரித்துவிட்டு வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விடுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

13 பேர் மீது வழக்கு

இதற்கிடையில் இந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றாவிட்டால் இங்குப் பயிலும் 26 பிள்ளைகளையும் வேறு பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவோம் என்று பிள்ளைகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்ட இந்த ஊரின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், எங்கள் பிள்ளைகள் குழிபிறையில் படித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழி மறித்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.

கலாட்டா செய்தவர்களிடம் ஏன் அப்படி மிரட்டினீர்கள் என்று கேட்டதற்கு மறுபடியும் அடித்துக் காயப்படுத்தி விட்டார்கள். இதில் தனுஷ், சூர்யப்பிரகாஷ், சோமேஷ், சந்தோஷ், மலையப்பன் ஆகிய ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இப்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்" என்றார்.

இது குறித்து பொன்னமராவதி காவல் துறையினர் செவலூரைச் சேர்ந்த கங்கா, ராஜ்குமார், பாலு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் செவலூரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊருக்குள் பெரும்பாலான ஆண்கள் தலைமறைவாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை அருகே சாதிப் பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்தியதாக 13-பேர் மீது வழக்கு...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள செவலூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக நடந்த முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு எழுந்த பிரச்சினையில் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்குதல் நடத்தியதாக மூன்று பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டுள்ளனர். 13-பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
செவலூரில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பயின்று ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று பிரச்சினை வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப் பட்டவர்களில் ஒருவரான குமார் என்பவர் கூறுகையில் எனது மகள் மதிவதனியை இங்குள்ள பள்ளியில் படித்து முடித்து விட்டு ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்கச் செல்லும்போதே குழிபிறையில் இருக்கும் தனியார் பள்ளியில் இருந்து பெற்றோரை கேன்வாஸ் செய்வதற்காக வந்திருந்தனர்.
இங்குள்ள பள்ளியின் தலைமையாசிரியர் ஜி.கீதா அந்தப் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் என்று வலியுறுத்தினார். சரி என்று அப்போதைக்கு சொல்லி விட்டு  குழிபிறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன். அதனால் கோபமடைந்த தலைமையாசிரியர் எனது மனைவியை பள்ளிக்கு வரச்சொல்லி உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் படித்தாலும் மார்க் எடுக்கவிடாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார். 
அது குறித்து பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலரிடம் மனுவாகக் கொடுத்தேன். அவர்கள் வந்து விசாரித்து விட்டு வேறு பள்ளிக்கு மாற்றல்வாங்கிக் கொண்டு சென்று விடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இதற்கிடையில் இந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றாவிட்டால் இங்கு பயிலும் 26-பிள்ளைகளையும் வேறு பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவோம் என்று பிள்ளைகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அதனால் வரக்கூடிய கவுன்சிங்கில் வேறு பள்ளிக்கு மாற்றி விடுவதாக கல்வி அலுவலர்கள் சொல்லி விட்டுச் சென்று விட்டனர்.
இதை மனதில் வைத்துக் கொண்ட இந்த ஊரின் மறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், எங்கள் பிள்ளைகள் குழிபிறையில் படித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழி மறித்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.
ஊருக்குள் வந்து சொன்னவுடன் அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஊருக்குள் உள்ள சாவடிக்குச் சென்று அங்கிருந்த ஏற்கனவே கலாட்டா செய்தவர்களிடம் ஏன் அப்படி மிரட்டினீர்கள் என்று கேட்டதற்கு மறுபடியும் அடித்துக் காயப்படுத்தி விட்டார்கள். இந்தச் சம்பவத்தில் தனுஷ் 17, சூர்யப்பிரகாஷ் 19, சோமேஷ் 20, சந்தோஷ், மலையப்பன் ஆகிய ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இப்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
இது குறித்து பொன்னமராவதி காவல் துறையினர் செவலூரைச் சேர்ந்த கங்கா, ராஜ்குமார், பாலு உள்ளிட்ட 13-பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் செவலூரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஊருக்குள் பெரும்பாலான ஆண்கள் தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.