ETV Bharat / state

'நிவர்' புயலால் புதுக்கோட்டையில் பேருந்து சேவைகள் நிறுத்தம்

author img

By

Published : Nov 24, 2020, 6:03 PM IST

புதுக்கோட்டை: நிவர் புயலால் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பேருந்து சேவை நிறுத்தம்
பேருந்து சேவை நிறுத்தம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'நிவர்' புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 'நிவர்' புயல் இன்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயலால் இன்று (நவ.24) நண்பகல் ஒரு மணி முதல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உட்பட 7 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து பேருந்துகளும் அரசு பணிமனையில் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருக்கும் அனைவரும் அவரவர் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.