அறந்தாங்கி அருகே புதுக்கோட்டை சாலையில் உள்ள பட்டரைசேரி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கீளையூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை ராசேந்திரன்(55), மகன் விக்னேஷ்வரன் (22) மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவு என்று கூறப்படுகிறது.