ETV Bharat / state

அறிவை வளர்க்க அறிவொளிப் பெட்டி - புதுக்கோட்டை மனிதரின் சமூக சேவை - புதுக்கோட்டையில் அறிவொளிப் பெட்டி

புதுக்கோட்டை: சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் 'அறம்' என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

books-box
books-box
author img

By

Published : Feb 7, 2020, 11:58 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார்.

இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் சென்று வாங்க வேண்டிய நிலையுள்ளது.

இதையறிந்த, சுப்பையா நான்கு நாட்களுக்கு முன்பு, தனது சொந்த செலவில் 'அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள், செய்தித்தாள்கள், வேலைவாய்ப்பு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றை, அந்தப் பெட்டிக்குள் வைத்து அவ்வூர் மக்களையும், மாணவர்களையும் அழைத்து 'எடுத்து படியுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியும்' என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அறிவொளிப் பெட்டி

இந்த ’அறம்’ பெட்டியால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பயனடைந்து உள்ளதோடு சுப்பையாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி லஞ்ச ஒழிப்புத்துறை பிளேட் - காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கைது.

Intro:Body:அறிவை வளர்க்க அறிவொளிப் பெட்டி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்தியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடையாத்தூர் எனும் கிராமம். இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வசித்து வருகிறார் 50 வயதுடைய சுப்பையா. மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார் அதனால் இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட 4 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதை அறிந்த இவர் 4 நாட்களுக்கு முன்பு தனது சொந்த செலவில் அறம் என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள் செய்திதாள்கள் வேலைவாய்ப்பு செய்தித்தாள்கள் வார மற்றும் மாத இதழ் ஆகியவற்றை அந்த பெட்டிக்குள் வைத்து அவ்வூர் மக்களையும் மாணவர்களையும் அழைத்து இந்தப் பெட்டியில் உள்ள அனைத்தையும் எடுத்து படியுங்கள் நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்பின் அனைவரும் புத்தகப் பெட்டியை நாடா ஆரம்பித்துவிட்டனர் தற்போது அதில் உள்ள புத்தகங்களை படிக்க தொடங்கி விட்டனர் இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பயனடைந்து உள்ளதோடு சுப்பையாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோரிடம் கேட்டபோது,

இடையாத்தூர் பகுதியில் பட்டியலின மக்கள் அதிகமாக இருக்கின்றனர் அதனால் அனைவருமே ஒதுக்கப்பட்ட தான் பிறந்து வளர்ந்து வருகிறோம். வெளியூருக்குச் சென்று படித்து விட்டு தற்போது வேலை வாய்ப்பு தேடி சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம் ஒரு பேனா வாங்க வேண்டுமென்றால் கூட ஐந்து கிலோமீட்டருக்கு செல்ல வேண்டும் அப்படிப்பட்ட ஊரில் செய்தித்தாளை படிப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்தது ஆனால் தற்போது சுப்பையா எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இந்த அறிவொளி பெட்டியை வைத்திருப்பதால் எங்களுக்கு தினம்தோறும் வேலைவாய்ப்பு நாட்டு நடப்புகள் அறிவு சார்ந்த புத்தகங்கள் என அனைத்துமே இந்தப் பெட்டிக்குள் இருக்கிறது இதனை படித்து நாள் தோறும் பயன் அடைகிறோம் அதுமட்டுமில்லாமல் சுப்பையா பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கிராம மக்களுக்கு நிறைய உதவிகளை யோசிக்காமல் செய்யக்கூடியவர் இந்த பெட்டியை வைத்ததற்காக அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

இதுகுறித்து சுப்பையா விடம் கேட்டபோது,

சிறுவயதிலிருந்தே ஏழ்மையில் தான் வளர்ந்தேன் கஷ்டப்பட்டு தற்போது ஒரு பணியில் இருக்கிறேன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான் எனது சொந்த ஊரான இடையாத்தூர் கிராமத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பேன் பண உதவி பொருள் உதவி எல்லாம் தற்காலிகமாகத் தான் இருக்கும் ஆனால் நிரந்தரமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி தான் இந்த பெட்டியை வைத்தியம் தற்போதைய இளைஞர்கள் மாணவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வியறிவை தவிர மற்ற அனைத்தையும் மக்களுக்கு கொடுப்பதைவிட அறிவை கொடுத்தால் அனைத்தும் அவர்களுக்கு தானாக கிடைத்துவிடும் என்பது எனது நம்பிக்கை .என்னால் முடிந்த வரை கிராமங்களுக்கு இது போல அமைப்பேன் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.