ETV Bharat / state

பொதுத்தேர்வில் சாதித்து காட்டிய பார்வையற்ற மாணவி!

புதுக்கோட்டை: பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்று பார்வையற்ற மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சாதிப்பதற்கு குறை ஒரு தடையே இல்லை: சாதித்து காட்டிய பார்வையற்ற மாணவி!
author img

By

Published : Apr 24, 2019, 10:02 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை பகுதியை சேர்ந்தவர் மாணவி அலிமத்துசாதியா. இவரது தந்தையார் அப்துல் லத்தீப் ஒரு கூலித் தொழிலாளி. தாயார் ஜன்னத்து சுறுதோஸ். அலிமத்துசாதியா சிறுவயதில் இருந்தே கண்பார்வை அற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த அலிமத்துசாதியா , பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது, நான் பார்வையற்றவராக பள்ளியில் சேரும் பொழுது என்னை அனைவரும் கேலி செய்தார்கள். ஆசிரியர்கள் கூட என்னை கேலி செய்தார்கள். ஏன் பள்ளியில் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. இத்தனை கேலிப் பேச்சுகளையும் மனதில் வாங்கிக் கொண்டு இரவு பகலாக படித்தேன். அதன் விளைவாக பொதுத் தேர்வில் 478 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளேன்.

எனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

Intro:என்னை ஒதுக்கியவர்கள் முன்னால் நான் சாதித்து விட்டேன் சாதிப்பதற்கு குறை ஒரு தடையே இல்லை தைரியம் மட்டும் தான் தேவை..... என்று அனைவருக்கும் ஓர் உதாரணமாக மாறியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி அலிமா..

Body:புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை பகுதியை சேர்ந்தவர் மாணவி அலிமத்துசாதியா. இவரது தந்தையார் அப்துல் லத்தீப் ஒரு கூலித் தொழிலாளி, தாயார் ஜன்னத்து சுறுதோஸ் ஒரு இல்லத்தரசி. அலிமத்துசாதியா என்ற மாணவி பிறவியிலேயே பார்வையை இழந்து விட்டார். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்களை பெற்று பள்ளியின் முதலிடத்தை பெற்றுள்ளார். பார்வையுள்ள சிலருக்கே படிப்பதற்கு சோம்பேறித்தனமும், படிப்பில் அசட்டுத்தனமும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பார்வை இல்லாமல் இருந்தாலும் தன்னுடைய கடும் முயற்சியாலும் பெற்றோரின் ஊக்கத்தினாலும் தற்போது இந்த மாணவி அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளார். இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, எனக்கு பிறவியிலிருந்தே பார்வை தெரியாது எத்தனையோ மருத்துவமனைக்கு சென்றோம் எத்தனையோ மருத்துவ முறைகளை செய்தும் பார்வை கிடைக்க வில்லை கிடைக்கவும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் .நான் பார்வையற்றவராக பள்ளியில் சேரும் பொழுது என்னை அனைவரும் கேலி செய்தார்கள் ஆசிரியர்கள் கூட என்னை கேலி செய்தார்கள். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பார்வையற்றோருக்கான அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 399 மதிப்பெண்களை பெற்றேன். அதன் பிறகு 11ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு என்னை புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். கண் தெரியாத பிள்ளைகளை எப்படி நாங்கள் படிக்க வைத்து பாஸ் செய்ய வைப்பது என்று ஒதுக்கி விட்டார்கள். அதன் பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சென்று கெஞ்சிக் கேட்ட பிறகு சேர்த்துக் கொண்டார்கள் எனக்கு வணிகவியல் பிரிவை கொடுத்தனர். எனக்கு வரலாறு பிரிவை தாங்கள் என்று கேட்டேன் ஆனால் தர மறுத்துவிட்டனர். நான் பிரெய்லி மூலம் படிக்க தொடங்கினேன் ரெக்கார்ட் செய்து கொண்டு பாடங்களை படிப்பேன் அதற்கு எனது அண்ணன் உதவி செய்வார். கண் தெரியாத பிள்ளையை எப்படி சேர்த்துக் கொள்வது என்று அப்பள்ளி தலைமையாசிரியர் கேட்ட வார்த்தை என் மனதில் முள்ளாக குத்திக் கொண்டிருந்தது அதை மனதில் வைத்துக் கொண்டு இரவு பகலாக படித்தேன் கடுமையாக முயற்சி செய்தேன். ஒரு சில ஆசிரியர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர். தற்போது 478 மதிப்பெண்களை பெற்றுள்ளேன் பள்ளியில் நான் முதலிடத்தை பிடித்து உள்ளேன். எனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று லட்சியம் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எனது வீட்டில் படிக்க வைக்க வசதி இல்லை அதனால் அரசு கல்லூரியில் சேர்க்க போகிறார்கள் எனக்கு பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. எதில் படித்தாலும் நிச்சயம் நான் ஐஏஎஸ் ஆவேன். சாதிக்க வேண்டும் என்ற தைரியம் இருந்தால் உடம்பில் உள்ள குறை எல்லாம் ஒரு தடையே இல்லை. என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இத்தகைய மன தைரியம் நிறைந்த மாணவிக்கு etv பாரதத்தின் அன்பு வாழ்த்துக்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.