ETV Bharat / state

காற்றில் பறக்கவிடப்பட்ட பிரதமரின் வேண்டுகோள் - காற்றில் பறக்கவிடப்பட்ட பிரதமரின் வேண்டுகோள்

புதுக்கோட்டை: கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர்.

BJP temple function to prevent corona
BJP temple function to prevent corona
author img

By

Published : Mar 21, 2020, 3:17 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

பொது இடங்களில் மக்கள் தேவையின்றி கூடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு ஆற்றிய உரையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஆனால், பிரதமரின் வேண்டுகோளையெல்லாம் துளியும் சட்டைசெய்யாமல், யார் என்ன சொன்னாலும் கரோனாவிலிருந்து கடவுள் எங்களைக் காப்பாற்றுவார் என்ற அதீத நம்பிக்கையில் யாகம் நடத்தியுள்ளனர் புதுக்கோட்டை பாஜகவினர்.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் விட்டோபா பெருமாள்கோயில் வளாகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஏ.வி.சி. கணேசன் தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்து தீபாராதனை காண்பித்தனர்.

காற்றில் பறக்கவிடப்பட்ட பிரதமரின் வேண்டுகோள்

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் பாஜகவினரின் இந்தப் போராட்டம் மக்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு -தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நீதிபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.