ETV Bharat / state

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 - ஆயுஷ் மருத்துவர் பரிந்துரை - immunity medicine

புதுக்கோட்டை: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆயுஷ் மருத்துவர் த. சுயமரியாதை தெரிவித்துள்ளார்.

ஆர்சனிக் ஆல்பம் 30
ஆர்சனிக் ஆல்பம் 30
author img

By

Published : Jul 8, 2021, 6:02 PM IST

Updated : Jul 8, 2021, 6:08 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கும் நிகழ்வு இன்று (ஜூலை 8) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆயுஷ் மருத்துவர் த. சுயமரியாதை அங்கு பணிபுரியும் செவிலியர், கிராமப்புற செவிலியர், அலுவலகப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 100 பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கினார்.

பின்னர் அவர், "பொதுமக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து மாத்திரைகள், ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாத்திரைகள், ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரண்டு மாத்திரைகள் என நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இம்மாத்திரைகளைத் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த மாத்திரை உட்கொண்ட மூன்று வாரங்களுக்குப் பின்பு இதேபோல் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பாதுகாப்பு பணி ஒப்பந்த ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Last Updated : Jul 8, 2021, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.