புதுக்கோட்டை: விராலிமலை அருகே விராலூரில் உள்ள மிகப்பழமையான பூமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோரும் ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இன்று (நவ.8) பூமீஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் பக்தர்கள் பக்தி தேவாரப் பாடல்கள் பாடியதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் சென்றனர்.
கோயிலில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பு தந்தது. பூஜையில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தும் பக்தர்கள் உண்டியலிலோ அல்லது தட்டிலோ செலுத்த வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக கோயிலுக்கு நன்கொடையாக மரக்கன்றுகள் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
அத்தோடு, பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் உண்டியலிலோ, தட்டிலோ செலுத்தாமல் அதற்குப்பதிலாக நன்கொடையாக மரக்கன்றுகளை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதற்கு பக்தர்கள் நல்ல வரவேற்பு அளித்ததோடு, ஏராளமான மரக்கன்றுகளை வாங்கி கோயிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஐப்பசி மாத கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..