ETV Bharat / state

ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை: காவல் துறை விசாரணை - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி சேலையைத் திருட முயற்சி செய்த சம்பவத்தில், தன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

alangudi-village-administration-office-assistant-commits-suicide

author img

By

Published : Feb 14, 2021, 3:30 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இலவச வேட்டி, சேலையை சரக்கு ஆட்டோ மூலம் திருட முயற்சி நடந்தது. இதனை பார்த்த சிலர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததன்பேரில், திருட்டு சம்பவம் முறியடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாங்காடு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ராமன் (38), என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இதனால் ராமன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் ஆலங்குடியில் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகேவுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ராமன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி காவல் துறையினர் உயிரிழந்த ராமனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.