ETV Bharat / state

மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கு உணவு கிடையாது

புதுக்கோட்டை: மதம் பார்த்து வருபவர்களுக்கு எங்கள் உணவகத்தில் உணவு கிடையாது என்று பதாகை வைத்து புதுக்கோட்டை உணவக உரிமையாளர் அசத்தியுள்ளார்.

zomato issue in tamilnadu
author img

By

Published : Aug 2, 2019, 11:51 PM IST

உணவிற்கு மதம் கிடையாது அனைவருக்குமே உணவு என்பது ஒன்றுதான் என்ற சொமெட்டோ நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் உணவகம் நடத்தி வரும் ஒருவர் "மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கு உணவு கிடையாது" என்ற பதாகையை வைத்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாரட்டுகளை தெரிவித்துள்ளனர்.

சொமெட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கொண்டு வருபவர் தனது மதம் கிடையாது என்று டெலிவரி வழங்குபவரை மாற்றக் கூறி சொமெட்டோ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் ஆர்டரை ரத்து செய்து அதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட சொமெட்டோ நிறுவனம் உணவுக்கு மதம் என்பது கிடையாது. உணவு உண்ணும் அனைவருமே சமம்தான் என்ற பதிலை அவருக்கு பதிவிட்டிருந்தது. சொமெட்டோவின் இச்செயல் நாடு முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

TAmilnadu hotel  zomato issue in tamil
பதாகை

இதனைக் கண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்மொழி - உஷாராணி தம்பதியினர் தங்களது ஐங்கரன் உணவகத்தில் மதம் பார்த்து வருபவர்களுக்கு சாப்பாடு இல்லை என கடைக்கு வெளியே பதாகையை வைத்தனர். இதற்கு பெரும்பாலான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜங்கரன் உணவகம்
இதுகுறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் உஷாராணி கூறுகையில், "உலகில் பிறந்த அனைவரும் சமம் தான். மதம் என்பது உணவுக்கு கிடையாது என்று சொமெட்டோ நிறுவனம் சரியான ஒரு பதிலை பதிவு செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக தான் நாங்களும் இதை செய்தோம். மதம் பார்ப்பவர்களுக்கு இந்த பதாகையைப் பார்த்தால் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றும் என்பது எனது கருத்து” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், "உணவு என்பதற்கு மதம் எல்லாம் கிடையாது அனைவருமே வயிற்றுப்பசிக்கு தான் உண்ணுகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த பதாகை வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Intro:சொமேட்டோ பதிவின் எதிரொலி.. ஜாதி மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கே உணவு கிடையாது.. புதுக்கோட்டையில் உணவகம் உரிமையாளர் அதிரடி..

Body:உணவிற்கு மதம் கிடையாது அனைவருக்குமே உணவு என்பது ஒன்றுதான் என்ற zomato நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் உணவகம் நடத்தி வரும் ஒருவர் "மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கு உணவு கிடையாது என்ற பதாகையை வைத்துள்ளார்" இதுவும் புதுக்கோட்டை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
zomato செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உணவு கொண்டு வந்த டெலிவரி பாய் தனது மாதம் கிடையாது, தனது மொழி கிடையாது என்று கூறி டெலிவரி பாய் மாற்றக்கோரி நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார். zomato நிறுவனம் மறுத்துள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனைக் கண்ட ஜமாத் நிறுவனம் உணவுக்கு மதம் என்பது கிடையாது உணவு உண்ணும் அனைவருமே சமம்தான் என்ற பதிவை அவருக்கு பதிவிட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதனைக் கண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்மொழி உஷாராணி தம்பதியினர் தனது ஐங்கரன் உணவக கடையிலும் மாதம் பார்த்து வருபவர்களுக்கு சாப்பாடு இல்லை என கடைக்கு வெளியே பதாகையை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஐங்கரன் கடை உரிமையாளர் உஷாராணி கூறுகையில்,
எனது கடையில் இந்த பதாகை வைத்திருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது உலகில் பிறந்த அனைவரும் சமம் தான் ஜாதி மதம் என்பது உணவுக்கு கிடையாது zomato நிறுவனம் சரியான ஒரு பதிலை பதிவு செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக தான் நாங்களும் இதை செய்தோம். நாடு முழுவதுமே ஒவ்வொரு கடைகளிலும் இப்படி ஒரு பாதையை வைத்தாள் மதம் பார்ப்பவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றும் என்பது எனது கருத்து என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகையில்,

இந்த பதாகையில் எழுதி இருப்பதும் இதை வைத்த கடை உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் உணவு என்பதற்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது அனைவருமே வயிற்றுப்பசிக்கு தான் உண்ணுகிறோம் அதனால் உணவு என்ற ஒன்றுக்கு மதங்களை பார்ப்பது தவறு என்பதை எடுத்துக்காட்டாக இக்கடையில் இந்த பதாகை வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கடை வாடிக்கையாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.