ETV Bharat / state

‘ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கே சமம்’ - நடிகர் தாமு!

author img

By

Published : Aug 7, 2023, 11:04 PM IST

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கலந்துகொணட நடிகர் தாமு, ‘ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கே சமம்’ என பேசினார்.

Etv Bharat
Etv Bharat
புத்தகத் திருவிழாவில் பேசிய நடிகர் தாமு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “கல்வியை தேடித்தேடி செல்ல வேண்டுமென அப்துல்கலாம் கூறுவார். தேவையற்ற விஷயங்களில் விடுதலையும், தேவையான விஷயங்களை புகுத்துவது தான் கல்வி. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது முற்றிலும் புறம்பானது. சுரக்காய் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது, இன்றைய காலகட்டத்தில் கிட்னி பேஷண்டுகள் அதிகமாக உள்ளதற்கு காரணம் சுரக்காயை அவமதித்ததே.

நல்ல நல்ல வார்த்தைகளை தவறாக பயன்படுத்தி காலங்காலமாக பழகிவிட்டோம். கனவு காணுங்கள் என பல அறிஞர்கள் சொல்கிறார்கள், கனவு என்பது உறக்கத்தில் வருவதில்லை கனவு, உறங்க விடாமல் செய்வது தான் கனவு. பகல் கனவு பலிக்காது என்று சொல்வதில் சதி உள்ளது. புத்தகங்களில் நாசமாய் போவது, மனைவியை வீட்டை விட்டு துரத்துவது, மது குடிப்பது எப்படி என புத்தங்கள் ஒன்றும் கிடையாது. எல்லா புத்தகங்களும் வாழ்க்கை உருவாக்குவதற்கே பயன்படுகிறது.

ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கே சமம். மிமிக்கிரி செய்வதெல்லாம் அது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் உதாரணமாக இருக்க வேண்டும். சுமோக்கிங், ட்ரிங்கிங் இரண்டையும் புறக்கணித்தால் தான் குழந்தைகள் நலமாக வளரும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மிமிக்கிரியே செய்ய முடியும். ஆகவே உடல் நலம் குறித்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

இந்த புத்தக திருவிழாவில் சாலை பாதுகாப்பு குறித்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, பெற்றோர்கள் மகன் கேட்கிறான் என்று இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுக்கிறார்கள், அவர்கள் ஓட்டத் தெரியாமல் வாகனத்தை ஒட்டி ஒரு தலைமுறையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அனைவரும் தயவு செய்து தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் தயவு செய்து சீட் பெல்ட் அணிய வேண்டும். அனைவருக்கும் விழிப்புணர்வு கட்டாய அவசியம்.

அனைவரும் நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்றால் இயற்கை உணவுகளை நொறுங்க உன்ன வேண்டும். வாயை கட்டாமல் whatsapp பார்த்துக் கொண்டே உணவு சாப்பிட்டால் 40 வயதிலேயே போய் சேர்ந்து விடுவோம். தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் சீரியல், பெண்களை மிக கேவலமாக சித்தரிக்கிறது. ஆண்கள் மிக கேவலமாக ஸ்கிரிப்ட் எழுதி பெண்களை கேவலமாக சித்தரிக்கின்றனர்.

நண்பர்கள் அனைவரும் நல்ல தகப்பன்களாக இருக்க ஆசைப்படுகிறேன், அதற்கு புத்தகம் ஒரு காரணமாக இருக்க வேண்டும். பெண்கள் நல்ல தாய்மார்களாக இருக்க ஆசைப்படுகிறேன் உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும்” என பேசினார்.

இதையும் படிங்க: விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவர் நீக்கம்? - தாயார் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.