ETV Bharat / state

'எம்ஜிஆர் என் கடவுள்' - எம்ஜிஆர் சிலையை நாள்தோறும் வணங்கும் ரசிகர் நெகிழ்ச்சி! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் நாள்தோறும் காலை பழையப் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, சிலையைக் கட்டி அணைத்தபடி பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்கிறார். இந்த சுவாரஸ்யமான ரசிகர் பற்றிய தொகுப்பு இதோ...

எம்ஜிஆர் சிலையை நாள்தோறும் வணங்கும் ரசிகர்

author img

By

Published : May 21, 2020, 4:17 PM IST

அண்ணா, காந்தியடிகள், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் சிலைகள் நாள்தோறும் வெயிலில் வாடிக்கொண்டிருக்கும். அவர்களது பிறந்த நாள், நினைவு நாள்களில் மட்டும் சிலையைச் சுத்தம் செய்து அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுய தொழில் செய்துவரும் சுசீந்திரன் என்பவர், தினமும் காலை 9 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் பழையப் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, சிலையைக் கட்டி அணைத்தபடி பிரார்த்தனை செய்துவிட்டு தான், நகர்வாராம்.

அதனைக் காணும் பலருக்கும் அவர் கட்சிக்காரராக இருப்பார் என்ற எண்ணம் தோன்றுமாம். இந்தச் செயலை சுசீந்திரன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார். கட்சிக்காரர் இல்லையென்றால் ஒருவேளை ரசிகராக இருப்பாரோ என்ற எண்ணத்தில், அவரை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது, அவர் இதனை விளம்பரத்திற்காக செய்யவில்லை. தன் கடவுளை வணங்கிச்செல்வதாகக் கூறி, அங்கிருந்து சற்று நகர்ந்தார்.

பின்னர், பேசிய அவர், 'அனைவருக்குமே கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால், கடவுளாக எனக்கு என் தலைவர் எம்ஜிஆர் மீது தான் நம்பிக்கை உண்டு. அம்மா ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தபோது, அவர் மீது எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று என் தலைவரிடம் வேண்டிக்கொண்டேன்.

எம்ஜிஆர் சிலையை நாள்தோறும் வணங்கும் ரசிகர்

அதிலிருந்து இன்று வரை மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, எனது தனிப்பட்ட விருப்பமாகிவிட்டது. கல்லூரி காலத்திலிருந்தே தலைவரின் பித்தனாக இருந்தேன். இப்போது வரை அல்ல; என் வாழ்நாள் முழுவதும் தலைவனின் ரசிகன் என்று சொல்வதில் நான் பெருமையடைகிறேன். சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் எனது தாய், தந்தை, கடவுள் அனைத்துமே என் தலைவர் எம்ஜிஆர் தான்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க: ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.