புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கைவிட்டு சென்றதால் நித்யா தனது மூன்று குழந்தைகளையும் தனது தாயிடம் பாதுகாப்பாக விட்டு கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் கிறிஸ்டோபர்(22) என்ற இளைஞன் மது அருந்தி வீட்டிற்குள் நுழைந்து 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உறங்கிக்கொண்டிருந்த மற்ற இரண்டு குழந்தைகள், நித்யாவின் தாயார் கண் விழித்துப் பார்த்துபோது கிறிஸ்டோபரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தப்பி ஓடிய கிறிஸ்டோபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து அடித்து அவுடையார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின், கிறிஸ்டோபர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் 9 வயது சிறுமியை இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜீப் ஓட்டுநர் சங்கத்தின் தலைவருக்கு அரிவாள் வெட்டு!