புதுக்கோட்டை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த கண்மணி என்ற மாணவி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோர் கொடுக்கும் சிறு பணத்தை உண்டியலில் சேர்த்துவைத்தார். அந்தத் தொகை ஐந்தாயிரமாக அதிகரித்தது.
இதனையடுத்து,தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக பலர் உணவு கிடைக்காமலும் ஏழை எளிய பொது மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உணவு கிடைக்காமல் முதியவர்கள் சாலையோரங்களில் தங்கியுள்ளனர்.
இதனை அறிந்த பள்ளி மாணவி தான் சேமித்து வைத்த பணத்தை உண்டியலிலிருந்து எடுத்து 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொது மக்களுக்கு தன்னால் முடிந்த காய்கறி, அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தன் தாயுடன் சேர்ந்து வழங்கினார்.
உதவியைப் பெற்றுக்கொண்டவர்கள், குழந்தையின் செயலைக் கண்டு நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
இதையும் படிங்க: சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி; பரிசளித்த அரசு