ETV Bharat / state

அறந்தாங்கி சிறுமியின் உறவினர் டவரில் ஏறி தற்கொலை முயற்சி! - pudukkottai district news

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி அச்சிறுமியின் உறவினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicite
suicite
author img

By

Published : Jul 4, 2020, 7:34 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் உறவினரான செல்வம் மகன் விஜய் (27 ), அருகிலுள்ள செல்போன் டவரில் 100 அடி உயரத்தில் ஏறி நின்று கொண்டு நீதி வேண்டும் எனக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் இறப்பிற்கு காரணமானவரை உடனடியாக தூக்கிலிட்டால் தான் கீழே இறங்குவேன் இல்லையென்றால் மேலிருந்து குதித்து உயிரை விட்டு விடுவேன் எனக் கூறியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.